Screener.in மூலம் முதலீட்டுக்கு ஏற்ற பங்குகளை தேர்வு செய்வது எப்படி?

 

பங்கு சந்தையில் முதலீடு செய்வது என்பது ஒரு கலை. அந்தக் கலையை நுண்ணறிவுடன் அணுக, Screener.in போன்ற தளங்களில் நிதி மற்றும் வளர்ச்சி சார்ந்த அளவுகோல்களை பயன்படுத்தி பங்குகளை வடிகட்டுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

அதற்கு முதலில்  Stock Screener and fundamental analysis tool for Indian stocks - Screener இந்த வலைதளதிற்கு சென்று உங்களுக்கான கணக்கை உருவாக்குங்கள்

 

 

உங்களுக்கான கணக்கை உருவாக்குங்கள்


 

கணக்கை உருவாக்கிய பின்  மேலுள்ள படத்தில் காட்டப்பட்டதைப் போல “SCREENS” எனுமிடத்தில் சொடுக்கவும்.

 

பின் வரும் பக்கத்தில் “CREATE NEW SCREEN” என்பதை அழுத்தவும் .

 

 

இங்கே இந்த Screener Query-ஐ உள்ளீட்டு

 

YOY Quarterly sales growth > 20 AND

YOY Quarterly profit growth > 15 AND

Debt to equity < 2 AND

Market Capitalization > 500 AND

OPM > 11 AND

Change in promoter holding >= 0

 

RUN THIS QUERY”-ஐ அழுத்தவும்  

 

வரும் விடைகளில் உங்களுக்கான பங்குகளை ஆராய்ந்து பின் , SEBI-யால் பதிவு செய்யப்பட்ட நிதி ஆலோசகரை கலந்தாலோசித்து உங்களுடைய முதலீட்டை தொடங்குங்கள்.

 

🔍 இந்த Screener என்ன சொல்கிறது?

விற்பனை வளர்ச்சி > 20%

நிறுவனம் வணிக ரீதியாக விரிவடைகிறது. இது எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு நல்ல அடையாளம்.

லாப வளர்ச்சி > 15%

நிறுவனம் செலவுகளை கட்டுப்படுத்தி, லாபத்தை அதிகரிக்கும் திறன் கொண்டது.

Debt to Equity < 2

நிதி கட்டுப்பாடு சிறந்தது. கடன் சுமை குறைவாக இருப்பது, நிறுவனத்தின் நிலைத்தன்மையை காட்டுகிறது.

Market Capitalization > ₹500 கோடி

நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வளர்ந்துள்ளது. பங்கு திரவம் ((Stock Liquidity),”  ஒரு பங்கு எளிதாக வாங்கவும் விற்கவும் முடியும்”)

மற்றும் நம்பகத்தன்மை அதிகம்.

 

OPM > 11% (செயல்பாட்டு லாப விகிதம்)

நிறுவனம் விலை நிர்ணய சக்தி கொண்டது. வணிக மாதிரியில் வலிமை உள்ளது.

Promoter holding மாற்றம் 0

நிறுவனர் பங்குகளை விற்கவில்லை. இது நிறுவனத்தில் அவர்களின் நம்பிக்கையை காட்டுகிறது.

 

📈 முதலீடு செய்ய ஏற்ற பங்குகள்: ஏன் இது முக்கியம்?

இந்த Screener-ல் வரும் பங்குகள்:

நிதி ரீதியாக வலிமையானவை

வளர்ச்சி பாதையில் உள்ளவை

நிர்வாக நம்பகத்தன்மை கொண்டவை

இவை நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றவை. ஆனால், பங்கு சந்தை என்பது எப்போதும் அபாயம் கொண்டது. அதனால், நிதி ஆலோசகரின் வழிகாட்டுதல் அவசியம்.

 

 

⚠️ Disclaimer

இந்த பதிவில் உள்ள Screener Query மற்றும் தகவல்கள் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. முதலீடு செய்வதற்கு முன், SEBI-யால் பதிவு செய்யப்பட்ட நிதி ஆலோசகரை அணுகவும்.

Comments

Popular posts from this blog

Delete ஆகாத Registry Key-ஐ Delete செய்வது எப்படி?

How to use ccleaner?