விண்டோஸ் கணினியில் இன்டர்நெட் வேகம் மெதுவாக உள்ளதா? அதை சரிசெய்யும் எளிய வழி!

உங்களது விண்டோஸ் கணினியில் இணைய வேகம் (Internet Speed) மிகவும் குறைவாக இருக்கும்போது, 

உடனே வைஃபை (Wi-Fi) இணைப்பை மட்டும் குறை சொல்வது தவறாக இருக்கலாம். ஏனெனில், 

பின்னணியில் இயங்கும் சில செயலிகள் (Background Apps) உங்களது இன்டர்நெட் டேட்டாவை ரகசியமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கக்கூடும்.

இதை எவ்வாறு கண்டறிந்து சரிசெய்வது என்பதைப் பற்றி இந்த வழிகாட்டியில் விரிவாகப் பார்ப்போம்.

இன்டர்நெட் பேண்ட்வித் பயன்படுத்தும் செயலிகளைக் கண்டறிவது எப்படி?


உங்கள் விசைப்பலகையில் (Keyboard) Windows Key + R ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் அழுத்தவும்


1.Run சாளரத்தை திறக்கவும்:விசைப்பலகை சுருக்குவழி.

உங்கள் விசைப்பலகையில் (Keyboard) Windows Key + R ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் அழுத்தவும்.

2.Resource Monitor கட்டளையை உள்ளிடவும்:

திறக்கும் சிறிய பெட்டியில் resmon என்று தட்டச்சு செய்து Enter அழுத்தவும்.




3.Network டேப்பிற்கு செல்லவும்:

திறக்கும் ரிசோர்ஸ் மானிட்டர் சாளரத்தின் மேல்பகுதியில் உள்ள Network என்ற டேப்பை கிளிக் செய்யவும் 


 

4.டேட்டாவை அதிக அளவில் பயன்படுத்தும் செயலிகளை வரிசைப்படுத்தவும்:

Processes with Network Activity பகுதிக்குச் சென்று, Total (B/sec) என்ற பத்தியை (Column) கிளிக் செய்து அதிக தரவைப் பயன்படுத்தும் செயலிகளை மேலே கொண்டு வரவும்



தேவையில்லாத செயலிகளை நிறுத்துவது எப்படி?

பின்னணியில் இயங்கும் கேம் லான்ச்சர்கள், க்ளவுட் சிங்க் (Cloud Sync) செயலிகள் அல்லது அப்டேட்டர்களைப் பட்டியலின் மேலே காண்பீர்கள்.



தேவைப்படாத செயலியை வலது கிளிக் (Right Click) செய்து End Process என்பதைக் கொடுத்து அதை மூடலாம்.

*    எந்த செயலி என்று தெரியவில்லை என்றால், அதை வலது கிளிக் செய்து Search Online என்பதைத் தேர்ந்தெடுத்து இணையத்தில் தேடித் தெரிந்துகொள்ளலாம்

Comments

Popular posts from this blog

Screener.in மூலம் முதலீட்டுக்கு ஏற்ற பங்குகளை தேர்வு செய்வது எப்படி?

Delete ஆகாத Registry Key-ஐ Delete செய்வது எப்படி?

How to use ccleaner?